சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் பொன் விழா ஆண்டு 2026

போட்டிகள் விவரம்

8. தொடக்கக்கல்லூரி, பலதுறை தொழிற் கல்லூரி, &

புதுமுக வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள்

- சிறுகதை எழுதுதல்

9. பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தேசியக்கல்விக்

கழக மாணவர்களுக்கும் இளையர்களுக்கும்

- சிறுகதைப் போட்டி

10. சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும்

நிரந்தரவாசிகளும் மட்டுமே

- அறிவியல், வரலாற்றுக் கதைப்போட்டி

11. பொது மக்கள் – சிறுகதைப் போட்டி

போட்டிகள் விவரம்

1. பாலர் பள்ளி - மாறுவேடப் போட்டி

2. தொடக்க நிலை 1 – 2 - மாறுவேடப் போட்டி

3. தொடக்க நிலை 3 – 4 - கதை சொல்லும் போட்டி

4. தொடக்க நிலை 5 – 6 - பேச்சுப் போட்டி

5. உயர்நிலை 1 – 2 – நானும் ஒரு படைப்பாளி

6. உயர்நிலை 3 – நானும் ஒரு படைப்பாளி

7. உயர்நிலை 4 – 5 – நானும் ஒரு படைப்பாளி

                                                       முத்தமிழ் விழா போட்டிகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த ஆண்டு முத்தமிழ் விழாவை வழக்கம்போல் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் மாதம் நடத்தவிருக்கிறது.   முத்தமிழ் விழாவை ஒட்டி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு இன்று பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 400-500 மாணவர்கள் இலக்கியப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். பொது மக்களுக்கும் சிறுகதைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

                                       அனைத்துப் போட்டிகளுக்கும் படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 16.03.2026

11. பொது மக்கள் – சிறுகதைப் போட்டி

சிறுகதைப் போட்டிப் பரிசுகள்

முதல் பரிசு $500; 2ஆம் பரிசு $300; 3ஆம் பரிசு $200.

3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $100.

பொது மக்கள் – சிறுகதைப்

போட்டிக்கான விதிகள்

இவ்வாண்டு " ஈடுபாடு" எனும் கருப்பொருளைக் கொண்டு கதைகள் புனையப்பட வேண்டும். கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக அமைந்திருந்தால் சிறப்பு. பொது மக்கள் எழுதும் கதைகள் 1,200 முதல் 1,500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 கதைகள் அனுப்பலாம். கதைகளை இந்த Google Drive Linkல்

https://forms.gle/u1Y4UkaGxGzedMPPA

16.03.2026 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

10. அறிவியல், வரலாற்றுக் கதைப்போட்டி

சிறப்பு அறிவியல் சிறுகதைக்கு டாக்டர் காமேஸ்வரன் & டாக்டர் லலிதா காமேஸ்வரன் நினைவுப் பரிசு $250.00.

சிறப்பு வரலாற்றுச் சிறுகதைக்கு டாக்டர் சங்கரன் & முனைவர் சித்ரா சங்கரன் வழங்கும் பரிசு $250.00.

சிறப்புச் சிறுகதைகளுக்கான விதிகள்

போட்டியில் பங்கேற்போர் அறிவியல் கருவைக் கொண்ட கதைளையும் வரலாற்றுக் கருவைக் கொண்ட கதைகளையும் தனியாக அனுப்பலாம். கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக அமைந்திருக்க வேண்டும். இந்தக் கதைகளும் 1,200 முதல் 1,500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் இரண்டு கருக்களிலும் இரண்டு தனித்தனிக் கதைகளை அனுப்பலாம் அல்லது ஏதாவது ஒரு கருவில் ஒரு கதையை மட்டும் அனுப்பலாம்.

கதைகளை இந்த Google Drive Linkல்

https://forms.gle/ezpMVW6v2e4LxRaF7

 16.03.2026ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சிறுகதைப் போட்டிகளுக்குப் பொதுவான விதிகள்

  1. சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம்.

  2. எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது. சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் மற்ற

    உறுப்பினர்களும் உறுப்பினர் அல்லாதவர்களும் பங்கேற்கலாம்.

  3. கதைகள் எழுதப்பட்டுள்ள பக்கங்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சல்

    முகவரி போன்றவற்றைத் தனியாக Google Driveவில் பதிவு செய்ய வேண்டும்.

  4. படைப்புகளைக் கூடியவரை கணினியில் அச்சிட்டுப் பதிவேற்ற வேண்டும். எழுதி வருடி (ஸ்கேன் செய்து) அனுப்பினால், கையெழுத்துப் புரியும்படி தெளிவாக இருக்க வேண்டும். அச்சிட்டாலும் எழுதினாலும் தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இரு பக்கங்களிலும் இருக்கக்கூடாது. கதைகளை Word அல்லது PDF வடிவத்தில் அனுப்பலாம்.

  5. சிறுகதை தன்னுடையதுதான் என்றும் வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என்றும் உறுதி தெரிவிக்கப்பட வேண்டும்.

  6. போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.

  7. போட்டி முடிவுகள் ஏப்ரலில் நடக்க இருக்கும் முத்தமிழ் விழாவில் வெளியிடப்படும்.

  8. மேல் விவரங்களுக்கு எழுத்தாளர் கழக உதவித் தலைவர் திரு. கோ.இளங்கோவன் அவர்களை (9121 6494) தொடர்பு கொள்ளலாம்.

9. சிறுகதைப் போட்டி

தகுதி

பல்கலைக்கழக மாணவர்கள், தேசியக்கல்விக்

கழக மாணவர்கள் மற்றும் இளையர்களுக்கும்

விதிமுறைகள்

இவ்வாண்டு " ஈடுபாடு" எனும் கருப்பொருளைக் கொண்டு கதைகள் புனையப்பட வேண்டும். கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில், நடப்பதாக அமைந்திருந்தால் சிறப்பு. பொது மக்கள் எழுதும் கதைகள் 800 முதல் 1,000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 கதைகள் அனுப்பலாம். கதைகளை இந்த Google Drive Linkல்

https://forms.gle/3J8CZwSz4rofZ8GH7

16.03.2026 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  1. 8. சிறுகதைப எழுதும் போட்டி

  2. தகுதி

  3. தொடக்கக்கல்லூரி, பலதுறை தொழிற் கல்லூரி, &

  4. புதுமுக வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள

சிறுகதைப் போட்டிக்கான விதிகள்

  • போட்டி காலை மணி 9.00 முதல் 12.30 வரை நடைபெறும்.

  • கொடுக்கப்பட்டுள்ள மூன்று கதைக் கருக்களில் ஒன்றைத் தெரிவுசெய்து, கொடுக்கப்படும் கோடிட்ட A4 தாளில் 700 முதல் 900 வார்த்தைகளுக்குள் சிங்கப்பூர்ச் சூழலில் சிறுகதையை எழுத வேண்டும். கதைக்குத் தலைப்பும் கொடுக்க வேண்டும்.

  • கதைகள் எழுதப்படும் தாள்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக்கூடாது. பெயர், கல்லூரி, வகுப்பு, முகவரி, தொடர்பு எண்கள் போன்றவற்றை இங்கு கொடுக்கப்பட்டுள்ள தனிப் படிவத்தில் எழுதி கதையுடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

  • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 25.04.2026 அன்று நடைபெறும் முத்தமிழ் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

  • போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் மின்-சான்றிதழ் (E-Certificate) வழங்கப்படும்.

அனைத்துப் போட்டிகளின் படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 16.03.2026

விவரங்களுக்கு 9121 6494

திரு கோ.இளங்கோவன் , உதவித் தலைவர்