பதாகை

கட்டுரை படைப்போர்

அமர்வு 1: தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம்  I


முனைவர் சேரன் (கனடா)
இணைப் பேராசிரியர், சமூகவியல், மானிடவியல், குற்றவியல் துறை
விண்சர் பல்கலைக்கழகம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்



சேரன் தமிழில் ஏழு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவருடைய ஆங்கில நாடகங்கள் கனடாவிலும் அமெரிக்காவிலும் அரங்கேற்றப்பட்டுள்ளன. அவருடைய கவிதைகளும் பிற படைப்புகளும் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், கன்னடம், சிங்களம், ஸ்வீடிஷ் ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எங்கள் கண்ணீரால் அல்ல (Not By Our Tears) எனும் அவருடைய ஆக அண்மைய ஆங்கில நாடகம், 2010-ல்  டோரொண்டோவில் அரங்கேற்றப்பட்டு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தது. இவருடைய நாடகங்கள், நிகழ்ச்சிகள் பற்றித் தெரிந்துகொள்ள பின்வரும் வலைத்தளத்திற்குச் செல்க - www.asylumtheatregroup.ca

அவருடைய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் பின்வரும் சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன: Bomb ( New York), Wake (UK), Hayden's Ferry Review (USA), Sudasien(German), Lanka( Uppsala,  Sweden), The Little Magazine(India), and Lanka Actua( Netherlands). அவருடைய கவிதைகளின் ஆங்கில  மொழிபெயர்ப்புகள் புது டில்லி நவயானாவினால் Waking up is a dream எனும் தலைப்பிலும் (Navayana, New Delhi) Wilting Laughter: Three Tamil Poets எனும் தலைப்பிலும் (Toronto:TSAR publishers, 2009) தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. அவருடைய புதிய இருமொழிக் கவிதைத் தொகுப்பான "You Cannot Turn Away" அக்டோபர் 2011-ல் சிங்கப்பூரில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் வெளியிடப்படவிருக்கிறது.

தற்போது இவர், கானடாவின் விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் மானிடவியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

திரு ந சுசீந்திரன் (ஜெர்மனி)
எழுத்தாளர்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்





நடராஜா சுசீந்திரன் 1981 முதல் பெர்லினில் வசித்து வருகிறார். இவர், பாரிசிலிருந்து வெளியிடப்படும் காலாண்டு சமுதாயப் பண்பாட்டு, இலக்கிய இதழான உயிர்நிழலின் சார்பிலா ஆசிரியர்களில் ஒருவர். ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட இவர், நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய மற்றும் கலை விமர்சகர் ஆவார். 2011 ஜனவரியில் கொழும்புவில் நிழ்ந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு, சென்னையில், உலகெங்குமிருந்து வந்த தமிழ்க் கலைஞர்களும் தமிழ் எழுத்தாளர்களும் கலந்துகொண்ட தமிழ் இனி 2000 எனும் மாநாடு போன்ற பல அனைத்துலக மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறார். நடராஜா சுசீந்திரன், 1988ல் தோற்றுவிக்கப்பட்ட, புலம்பெயர்ந்த இலக்கியத்திற்கான அனைத்துலகக் கருத்தரங்கமான இலக்கியச் சந்திப்பின் தீவிர உறுப்பினர். பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் அடங்கிய 5 நூல்களை தம் “நூல்” வெளியீட்டு நிறுவனத்தின் வழி வெளியிட்டிருக்கிறார். அதோடு இவர், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் பலவற்றை ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஜெர்மனுக்கும் மொழிபெயர்த்திருக்கிறார்.

திருவாட்டி யசோதா பத்மநாதன் (ஆஸ்திரேலியா)
எழுத்தாளர்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்




இலக்கியம், இயற்கை மற்றும் கலைகளின் ரசிகையான யசோதா, தமது  எண்ணங்களை வலைப்பூவில் (www.akshayapaathram.blogspot.com) தொடர்ந்து   பதிந்து வருகிறார். உண்மையைத் தேடுதல், ஆன்மீகம் தன்னலமற்ற சேவை போன்றவற்றில் பெருமளவு ஈடுபாடுண்டு. ஆஸ்திரேலியாவில் நிகழும் எழுத்தாளர் விழாக்கள் மற்றும் புத்தக வெளியீட்டு விழாக்கள்  போன்றவற்றில் பங்குபெற்ற அவர், விழா மலர்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத் தளங்களில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். “அநாதரவாக விடப்பட்ட உயிரினங்களின் சேவையாளன்” என்று சொல்லிக் கொள்வதில் விருப்புடையவர். அமைதி, எளிமை,  உண்மை, நேர்மை, ஆகியவற்றைக் கொள்கைகளாகக் கொண்டு, மிகக் குறைந்தளவு தேவைகளோடு பற்றற்ற வாழ்க்கையைப் பின்பற்றுகிறார்.


அமர்வு 2: தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம் II


முனைவர் வே சபாபதி (மலேசியா)
இணைப் பேராசிரியர், இந்திய ஆய்வியல் துறை
மலாயாப் பல்கலைக்கழகம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்






1980களிலிருந்து மலேசியத் தமிழ் இலக்கியத்தில் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தி, அனைத்துலக, தேசிய, பல்கலைக்கழக அளவிலான  மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் ஆகியவற்றில்  ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளார். அனைத்துலக ஆய்விதழ்களிலும் மற்ற இதழ்களிலும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மீதுகொண்ட ஆய்வுகளின் பலனாக, தமிழில் 5 ஆய்வுநூல்களையும், ஆங்கிலத்தில் 2 ஆய்வுநூல்களையும், தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளில் பல கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.  தற்போது மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் நவீனத் தமிழ் இலக்கியங்கள், மலேசிய இலக்கியம், அயலக  இலக்கியங்கள், திறனாய்வு நெறி, கலை இலக்கியங்கள், நாட்டார் வழக்காற்றியல் முதலான துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்வது, பாடங்களைப் போதிப்பது; முதுகலை (எம்.ஏ.), முனைவர்(டாக்டர்) பட்டங்களுக்காக ஆய்வுகளை மேற்கொள்ளும்  மாணவர்களை வழிநடத்துவதிலும் ஈடுபட்டுள்ளார்.

முனைவர் சுப திண்ணப்பன் (சிங்கப்பூர்)
உடனிணைக் கல்வியாளர், தெற்காசிய கல்வித் துறை
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்





சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கலை மற்றும் சமுதாய அறிவியல் புலத்தின் தெற்காசிய கல்வித் துறை ஆய்வாளரும் மொழிக் கல்வி மையத்தின் தமிழ்மொழிப் பிரிவுத் தலைவருமான முனைவர் சுப திண்ணப்பன் ஒரு சிறந்த தமிழறிஞர். இவர் தனிச் சிறப்புப்பெற்று ஈடுபாடு காட்டும் துறைகள் தமிழ் இலக்கணம், மொழியியல், மொழிக்கல்வி, இலக்கியம் ஆகியன. தம் ஆராய்ச்சி, நூல்கள், கல்விப் பணி ஆகியவற்றின் வழி சிங்கப்பூரிலும் தமிழ்கூறும் நல்லுலகிலும் தமிழை வளர்க்கப் பெரும் பங்காற்றியுள்ளார். பல்லாண்டுகளாக, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசியக் கல்விக் கழகத் தமிழ்ப் பிரிவுத் தலைவராகவும் அதற்குமுன் மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையிலும் இந்தியாவின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கற்பித்திருக்கிறார். இவர் சிங்கப்பூர் SIM பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் தமிழ் இளங்கலைப் பட்டப் படிப்புக்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

முனைவர் சித்ரா சங்கரன் (சிங்கப்பூர்)
இணைப் பேராசிரியர், ஆங்கில மொழி இலக்கியத் துறை
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்



முனைவர் சித்ரா சங்கரன் ஆர்வம் கொண்டுள்ள ஆய்வுத் துறைகளில் தெற்காசியப் புனைவு இலக்கியம், பால் மற்றும் சூழியல் ஆய்வுகள் அடங்கும். தமிழ் இலக்கியத்திலும் போதனை முறையிலும் இவருக்குத் தனி ஆர்வம் உண்டு. 2004 மற்றும் 2009-ல் சிங்கப்பூர் தமிழ் மொழி மறு ஆய்வுக் குழுவில் பங்கேற்றிருக்கிறார். பல்வேறு அனைத்துலகச் சஞ்சிகைளில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியிருப்பதோடு தொகுப்பாசிரியராகவும் பங்களித்திருக்கிறார். இவர் இரு அனைத்துலகச் சஞ்சிகைகளின் அழைப்பு ஆசிரியர் மட்டுமன்றி பிரிட்டனின் காமன்வெல்த் நிறுவனத்தினால் 2008-ல் ஆசிய பசிபிக் காமன்வெல்த் பரிசுகளுக்கான வட்டாரக் குழுவில் நீதிபதியாகப் பணியாற்ற நியமிக்கப்பட்டார்.

முனைவர் நா. கண்ணன் (தென் கொரியா)
நிறுவனர்
தமிழ் மரபு அறக்கட்டளை
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்






முனைவர் நா கண்ணன் ஜெர்மானியக் குடியுரிமை பெற்ற இந்தியர். தமிழ் இலக்கிய, சரித்திர, கலை வடிவங்களை இலக்க வடிவில் மின்னுலகில் நிரந்தரப் படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவர். அமெரிக்கன் கல்லூரியில் படித்த அவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 1970களில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய நா கண்ணன், இதுவரை இரு சிறுகதைத் தொகுப்புகளும் ஒரு நாவல் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் பெரும்பாலும் மின்னுலகில் உலா வருகின்றன (www.emozi.com). ஜப்பானிலுள்ள எகிமே பல்கலைக் கழகத்திலும் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய முனைவர் நா கண்ணன், தற்போது கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் அமைப்பாளராக செயல்படுகிறார்.


அமர்வு 3: மின்தமிழ்: புதிய பரிமாணங்கள், புதிய வார்ப்புகள்

திரு முத்து நெடுமாறன் (மலேசியா)
உருவாக்குநர்
முரசு அஞ்சல் & செல்லினம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்



முத்து நெடுமாறனுக்குத் தமிழ் மொழிக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் உள்ளது. முரசு அஞ்சலும் செல்லினமும் கணினியிலும் கைத்தொலைபேசியிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கு அவர் உருவாக்கிய செயலிகள். இவருடைய படைப்புகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியக் கல்வி அமைச்சுக்களினால் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் அண்மைய மெக்கின்டாஷ் கணினியிலும் ஐ போனிலும் பயன்படுத்தப்படும் இந்திய, இந்தோ சீன மொழிகளுக்கான எழுத்துருக்களை உருவாக்கியவர் முத்து. Knowledge Channels Synergy Sdn Bhd எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் அவர், Sun Microsystems, Oracle Corporation போன்ற பெரிய நிறுவனங்களில் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் தொழிநுட்ப மற்றும் சந்தைப்படுத்தும் பணிகளில் பணியாற்றியதோடு ஜாவா, வெப், கைத்தொலைபேசித் தொழில்நுட்பங்களிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். முத்து, மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (1985) மின்னணுப் பொறியியலில் கணினிப் பொறியியலை முக்கியப் பாடமாக எடுத்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.

திருவாட்டி நாகலக்ஷ்மி சிவசம்பு (பிரான்ஸ்)
ஆசிரியர்
உயிர்நிழல்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்





இலங்கையில் பிறந்த லக்ஷ்மி (நாகலக்ஷ்மி சிவசம்பு) 1981-ல் பிரான்சுக்குச் சென்றார். 1990 முதல் ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பண்பாட்டு அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.  பெண்ணியம் சார்ந்த          பிரச்சினைகளில் அதிக அக்கறை கொண்டிருக்கிறார். “புகலிட இலக்கியச் சந்திப்பு” (எண்பதுகளின் பிற்பகுதியில் ஜெர்மனியில் தொடங்கப்பட்டு பின்னர் ஐரோப்பாவுக்கு விரிவடைந்தது) மற்றும் “பெண்கள் சந்திப்பு” (தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது) ஆகியவற்றின் தீவிர உறுப்பினர்களில் ஒருவர்.
பண்பாடு, நுண்கலைகள், திறனாய்வு ஆகியவற்றுக்கான தமிழ் சஞ்சிகையான எக்சைலின் (Exile) தொடக்க கால ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.  பின்னர் உயிர்நிழலின் (www.uyirnizhal.com) ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
இவர் எண்ணற்ற கட்டுரைகளையும் சிறுகதைகளையும் ஆங்கிலம் மற்றும் ஃப்ரெஞ்ச்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

மு மயூரன் (இலங்கை)
எழுத்தாளர்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்







மு. மயூரன் கிழக்கிலங்கையின் திருகோணமலை நகரில் பிறந்தவர். மென்பொருளாளராக தொழில் செய்யும் இவர், "நூலகம்" மின்னூலகத்  திட்டத்தினை உருவாக்கியவர்களுள் ஒருவர். சிங்கள தமிழ் மொழிகளுக்கான இலங்கையின் அதிகாரபூர்வ விசைப்பலகை இயக்கியினை உருவாக்குவதில் இவர் பங்கெடுத்துள்ளார். தமிழ்க் கணிமையும் தொழில்நுட்பியலின் அரசியலும் இவரது ஆய்வுப்பரப்புகளுள் சிலவாகும். இலங்கையில் தேசிய கலை இலக்கியப்பேரவை, சமூக விஞ்ஞான கற்கைவட்டம், இலங்கை லினக்ஸ் பயனர் குழுமம் போன்றவற்றில் இணைந்து பணியாற்றும் மயூரன், உலகத் தமிழ் தகவல் தொழிநுட்ப மன்றத்தின் (உத்தமம்) செயற்குழு உறுப்பினராவார். 2004ம் ஆண்டிலிருந்து இணையத்தில் எழுதி வரும் இவரது வலைப்பதிவுகளாவன  mauran.blogspot.com, mmauran.net/blog, mmauran.net/oli (குரல் வலைப்பதிவு).

 

கோபால் ராஜாராம் (அமெரிக்கா)
நிறுவன ஆசிரியர்
திண்ணை
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்




சினிமா, நாடகம், இலக்கியம் பற்றிய பல கட்டுரைகளின் ஆசிரியர். நாடக ஆசிரியர் பாதல் சர்க்காரின் படைப்புகளை வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்க்கப்பட்ட இரு நூல்கள் : "Evam Indrajit" (தமிழில் "பிறகொரு இந்திரஜித்") மற்றும் பாதல் சர்க்கார் நாடகங்களின் தொகுப்பு.

சிறுகதைத் தொகுப்பான "இழந்து போன ஆகாயம்" மற்றும் கவிதைத் தொகுப்பான "அலுமினியப் பார்வைகள்" ஆகியவற்றின் ஆசிரியர். கணையாழி, தீபம், காலச்சுவடு, உயிர்மை, படிகள் ஆகியவற்றிலும் பிற இலக்கியப் பத்திரிகைகளிலும் இவருடைய படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் தெரு நாடகக் கலைக்குப் பெரும் பங்காற்றுகிறார்.  தற்போது திண்ணை, சொல்வனம் ஆகிய இணையப் பத்திரிகைகளில் எழுதிவருகிறார்.


ஆ பழனியப்பன் (சிங்கப்பூர்)
துணை இயக்குநர்
சிங்கப்பூர் நாடாளுமன்றம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்





ஆ பழனியப்பன், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் மொழிச் சேவைப் பிரிவில் துணை இயக்குநராகப் பணியாற்றுகிறார். நாடாளுமன்றக்கூட்டங்களின் போதும், முக்கிய தேசிய நிகழ்ச்சிகளின்போதும் உடனுக்குடன் மொழிபெயர்ப்புச் சேவை வழங்குகிறார். ஊடக சொல்லாக்கத் தகுதரக் குழுவின் தலைவராகச் சேவையாற்றும் அவர், துறைசார்ந்த மற்றவர்களுடன் சேர்ந்து ஊடகச் சொற்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பல ஆண்டு காலமாக சமூக, சமய தொண்டூழியச் சேவையும் ஆற்றியுள்ளார்.

வாழ்நாள் கல்வி கற்றல் முறையின் கூறாக, அவர் ஆங்கில இலக்கியத்திலும் மொழியிலும் இளங்கலைப் பட்டத்தை யுனிசிம் பல்கலைக் கழகத்தில் 2007ம் ஆண்டில் பெற்றார். இப்போது அந்தப் பல்கலைக்கழகத்தின் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

அமர்வு 4: தாயகம் கடந்த தமிழ் எழுத்தாளர்களின் தாக்கம்

திரு தேவராஜ் (இலங்கை)
தலைமை ஆசிரியர்
வீரகேசரி
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்






வரலாற்றுத்துறையில் யாழ். பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (கானர்ஸ்) பட்டத்தையும் மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பட்டத்தையும் பெற்றுக்கொண்ட வ.தேவராஜ், கடந்த 24 வருடங்களுக்கு மேலாக பத்திரிகைத்துறையில் பணியாற்றி வருகின்றார். அரசில் சமூக இலக்கியத் துறைகளில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் மேற்படி துறைகள் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இலங்கையின் தேசிய அரசியல்; தமிழ்; முஸ்லிம் மக்கள் தொடர்பான அரசியல்; இனவிவகாரம் மற்றும் இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களின் அரசியல், சமூக, பொருளதார, கல்வி குறித்த ஆக்கங்கள் இவற்றுள் அடங்கும். வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவரும் இவரது பத்தி இலங்கையில் மாத்திரமல்ல புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியோரை நேர்காணல் செய்துள்ளார். சிறந்த தமிழ் பத்திரிகையாளர்களுக்கான விருதினை கடந்த ஆண்டு 2010 இல் பெற்றார். 2007ஆம் ஆண்டில் வருடத்தின் ‘சிறந்த மனிதர்’ என்ற பட்டத்தையும் பெற்ற இவர் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கான அதிகாரப்பரவலாக்கலை மேற்கொள்வதன் மூலமே இன விவகாரத்துக்கு இறுதியான தீர்வைக்காணமுடியும் என்ற இலக்கை நோக்கி தொடர்ந்தும் எழுதிவருகின்றார். வீரகேசரி பத்திரிகைக்கூடாக கலை இலக்கியத்தை வளர்த்தெடுப்பதுடன் புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதற்கும் களம் அமைத்துக் கொடுக்கின்றார். சிறுகதை, நாவல் போட்டிகளை நடத்தி அவற்றினைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டுள்ளார்.

நாகார்ஜூனன் (பிரிட்டன்)
எழுத்தாளர்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்




நாகார்ஜூனன் என மக்களால் அறியப்படும் ரமேஷ் கோபாலகிருஷ்ணன், 52, சென்னையில் பிறந்தவர். எழுத்தாளரும் மனித உரிமை ஆராய்ச்சியாளருமான இவர், முன்னர் அறிவியலாளராகவும் அச்சு/ஒலிச் செய்தியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் பெரும்பாலும் மொழி, அறிவியல், வரலாறு மற்றும் வாழ்க்கை பற்றி எழுதுகிறார். ஆங்கிலத்திலும் ஃப்ரெஞ்ச்சிலும் தேர்ச்சி பெற்ற இவர் தமிழில் எழுதுவதையும் தமிழுக்கு மொழிபெயர்ப்பதையுமே அதிகம் விரும்புகிறார். நாகார்ஜூனன் அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று வருகிறார்.

முனைவர் கிருஷ்ணன் மணியம்,
இணைப் பேராசிரியர், இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்








முனைவர் கிருஷ்ணன் மணியம் தற்போது மலேசியாவிலுள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது இளங்கலைப் பட்டத்தை மலாயாப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் “மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள், மலாய்ச் சிறுகதைகள் 1957 -1970 : ஓர் ஒப்பாய்வு” என்ற தலைப்பில் முதுகலைப் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு முடித்தார். இந்த ஆய்வேடு தேசிய மொழி வளர்ப்பு நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் "தமிழ் நாவல்களின் செல்நெறிகள் (1970-1995)" என்ற தலைப்பில் ஆய்வினை நடத்தி முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வுக் களத்தில் ஒப்பீட்டு இலக்கியம், நவீனத் தமிழ்இலக்கியம், மலேசியத் தமிழ் இலக்கியம், மலேசிய இந்தியச் சமூக வாழ்க்கை மற்றும் மலாய் இலக்கியம் முதலானவை உள்ளடங்குகின்றன. அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச மாநாடுகளில் 50 கட்டுரைகளுக்கு மேல் வாசித்துள்ளார்.  அவற்றோடு, 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் நூல் அதிகாரங்களையும் வெளியிட்டுள்ளார்.

முனைவர் கிர்ப்பால் சிங் (சிங்கப்பூர்)
இயக்குநர், வீ கிம் வீ மையம்
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்





பேராசிரியர் கிர்ப்பால் சிங் அனைத்துலகப் பாராட்டுப் பெற்ற எழுத்தாளர், அறிஞர், திறனாய்வாளர், கவிஞர். THINKING HATS & COLOURED TURBANS: Creativity Across Cultures (2004) எனும் அவருடைய நூல் வெளியானதிலிருந்து அவர் ஓர் படைப்புலக குருவாக அறியப்படுகிறார். கிர்ப்பால், 2005-ல் மதிப்புமிக்க ACA-யின் (அமெரிக்கப் படைப்புத்திறன் சங்கம்) குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்கர் அல்லதாவர் எனும் பெருமையைப் பெற்றதோடு அதன் அனத்துலக அமைப்பின் தலைவராக உள்ளார். கிர்ப்பால், பல்வேறு பெரிய அனைத்துலக/உலகளாவிய பன்னாட்டு  நிறுவனங்களின் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். AMI (புத்தாக்கத்திற்கான அமெரிக்க நிர்வாகிகள்), MIT, CCL (படைப்புத் திறன் மிக்க தலைமைத்துவத்துக்கான மையம்) போன்ற பல உயர் அமைப்புகளால் படைப்புத் திறனின் இயல்பு பற்றிய தம் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டிருக்கிறார். அதிகம் நாடப்படும் பயிற்றுவிப்பாளரும் உலகெங்கும் நடைபெறும் தலைசிறந்த கலைவிழாக்களுக்குச் சிறப்பு அழைப்பாளருமான கிர்ப்பால், அண்மையில் ஆஸ்டின் அனைத்துலகக் கவிதை விழாவில் புகழ்பெற்ற அனைத்துலகக் கவிஞராக விருது பெற்றார். 1997-ல் கிர்ப்பால், உலகப் புகழ் பெற்ற அயோவா எழுத்தாளர் திட்டத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த அனைத்துலக எழுத்தாளராகப் பங்கேற்றார். கிர்ப்பால் இது வரை 25-க்கும் மேற்பட்ட நூல்களையும் 120-க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்.

அமர்வு 5: மொழிபெயர்ப்பு இலக்கியம்: தருதலும் பெறுதலும்

முனைவர் ழான்-லூய்க் செவ்வியார் (பிரான்ஸ்)
ஆய்வாளர், தேசிய அறிவியல் ஆய்வு மையம் & பிரெஞ்‍சு கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்




கணிதமும் மொழியியலும் பயின்ற ழான் லுக் செவியார்ட் (பிறப்பு 1956), தென்னிந்தியாவில் பேராசிரியர் முத்து சண்முகம் பிள்ளையிடம் தமிழ் கற்றார். தமிழ் இலக்கணப் பாரம்பரியத்தில் தனிக் கவனம் செலுத்திய இவர், சேனாவரையம் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி அதை பண்டிட் டி வி கோபால அய்யரின் துணையுடன் திருத்தினார். பிரெஞ்சு கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம், பின்னர் தேசிய அறிவியல் ஆய்வு மையத்தில் பணிக்கமர்த்தப்பட்ட இவர் மொழித் தத்துவ வரலாற்றுக் குழுவைச் சேர்ந்தவர். நூல்கள், அறிவியல் கட்டுரைகள், ஒரு கணினி வட்டு (கணினித் தேவாரம்) முதலியவற்றை வெளியிட்டுள்ளார். வரலாறு அறிவாய்வியல் மொழி (History Epistemology Language - ISSN 0750-8069) எனும் சஞ்சிகையின் ஆசிரியர். தற்போது ஆசியத் துறை ஃபிரெஞ்சுப் பள்ளி, பாண்டிச்சேரி மையத்தில் பணியாற்றும் இவர் அதன் ஏட்டுச் சுவடிக் சேகரிப்பைக் கணினிமயப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

முனைவர் செல்வா கனகநாயகம் (கனடா)
பேராசிரியர், ஆங்கில மொழித் துறை
டொரோண்டோ பல்கலைக்கழகம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்




செல்வா கனகநாயகம், டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறைப் பேராசிரியராகவும் தென்கிழக்காசியக் கல்வித்துறை மைய இயக்குனராகவும் உள்ளார். அவர் தனது முனைவர் பட்டத்தை பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், வேன்கூவரில் பெற்றார்.

செல்வாவின் வெளியீடுகளில் நெடுநல்வாடை(2010), இந்தோ ஆங்கிலப் புதினங்கள், கவிதைத் தொகுப்புகள், புலம்பெயர்ந்த தெற்காசிய எழுத்தாளர்கள் அவர்களது  உலகக் கட்டமைப்புகள் முதலியன அடங்கும். அவர் கனடிய இலக்கியம், இலங்கைத் தமிழர்களின் எழுத்தாளர்களின் படைப்புகள் போன்ற பல நூல்களை தொகுத்துள்ளார்.


திரு உதய சங்கர் எஸ் பி (மலேசியா)
எழுத்தாளர்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்







உதய சங்கர் SB தம்முடைய முதல் மொழியான மலாய் மொழியில் எழுதும் எழுத்தாளர். அவருடைய மலாய் மொழிப் புலமை அவர் மலாய்ச் சூழலில் வளர்ந்திருக்க வேண்டும் எனப் பலரையும் எண்ண வைத்திருக்கிறது. ஆனால், உதயா, பேரா மாநிலத்தில் இந்தியர்கள் பெரும்பான்மையினராக இருந்த தைப்பிங்கில் வளர்ந்தவர். உதயா, 1999 முதல் 2007 வரை பல்வேறு கல்லூரிகளில் மலாய் மொழி அறநெறிக் கல்வி, மலேசியத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். 1996-க்கும் 2010-க்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் ரேடியோ டெலிவிஷன் மலேசியாவில் (Radio Televisyen Malaysia - RTM) பணியாற்றினார். உதயா, மார்ச் 2011 முதல் உதயாவின் ஊடக, தன்முனைப்பு, பிரசுர ஆலோசனை நிறுவனத்தில் (Uthaya’s Media, Motivation and Publication Consultancy) முழுநேரப் பணியாற்றுகிறார். இவர், காவ்யன் எழுத்தாளர் குழு (Kumpulan Sasterawan Kavyan) எனும் அமைப்பைத் தோற்றுவித்து அதன் தலைவராக உள்ளார்.  இந்த அமைப்பு 96 மணி 32 நிமிடங்களுக்கு இடைவிடாமல் மலாய் மொழிச் சிறுகதைகளை வாசித்த சாதனை மலேசியச் சாதனை ஏட்டில் இடம்பெற்றுள்ளது.

சிலாங்கூர் ஷா ஆலமில் வசிக்கும் உதயா, www.uthayasb.blogspot.com எனும் வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

அமர்வு 6: தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள் I

மாலன் (இந்தியா)
ஆசிரியர்
புதிய தலைமுறை
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்




மாலன், (வெ நாராயணன்), இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் போன்ற முன்னணி இதழ்களிலும் சன் செய்திகள் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ள ஓர் எழுத்தாளர் – இதழாளர். இப்போது SRM பல்கலைக்கழக சமூக ஊடகத் துறையின் ஆலோசகராகவும் தமிழ் வார ஏடான புதிய தலைமுறையின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 13 நூல்களை எழுதியுள்ளார். இவருடைய சிறுகதைத் தொகுப்புகள், தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில், முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு நவீனத் தமிழ் இலக்கிய ஆய்வு நூல்களாக இருந்துள்ளன. “மாறுதல் வரும்” எனும் இவருடைய சிறுகதைத் தொகுப்பு, 1989-ல் ஆண்டின் சிறந்த நூலாக பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் விருது பெற்றது. இவருடைய கவிதைகள், அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் ஆலிவர் பெரியினால் தொகுக்கப்பட்ட “அவசரகால நிலையின் குரல்கள்” எனும் எதிர்ப்புக் கவிதைத் தொகுப்பிலும் சாகித்திய அகாடெமியின் (Sahitya Academy) தமிழ்க் கவிதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளன. இவருடைய சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள், இந்தியாவின் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, இந்தியா டுடே, டெக்கான் ஹெரால்ட், விபுலா, மாத்ருபூமி, கல்கத்தாவின் எழுத்தாளர் பயிலரங்கினால் வெளியிடப்பட்ட நவீனத் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு போன்றவற்றில் வெளியாகியுள்ளன.

முனைவர் சாஷா எபெலிங் (அமெரிக்கா)
உதவிப் பேராசிரியர், தெற்காசிய மொழிகள், நாகரிகங்கள் துறை
சிகாகோ பல்கலைக்கழகம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 




சாஷா எபெலிங் சிகாகோ பல்கலைக்கழகத் தெற்காசிய மொழிகள், நாகரிகங்கள் துறைத் துணைப் பேராசிரியர். சிகாகோவுக்கு வருவதற்கு முன்னர், ஜெர்மனின் கோலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் மற்றும் தமிழ்த்துறையில் கற்பித்தார். இங்கு தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். Colonizing the Realm of Words: The Transformation of Tamil Literature in Nineteenth-Century South India (SUNY Press, 2010) எனும் நூலையும் நவீன காலத்துக்கு முந்திய, நவீனத் தமிழ் இலக்கியம் பற்றிய பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். தற்போது இவர் உலகளாவிய கண்ணோட்டத்திலிருந்து சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றிய நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.

யுவராஜ் சுப்ரமணியம் (மலேசியா)
ஆசிரியர்
செம்பருத்தி
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்


சுங்கைப்பட்டாணி கெடாவில் பிறந்த யுவராஜின் பெற்றோர் கண்ணகி மற்றும் சுப்ரமணியம்.. மலாயாப்பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்று, சில வருடங்கள் பொறியாளராக இருந்துவிட்டு தற்போது இதழியலாளராக உள்ளார். முதலில் தும்பி என்ற மாணவர்களுக்கான ஆங்கில.தமிழ் இதழின் தலைமை ஆசிரியராகவும், தற்போது சமூக இதழான செம்பருத்தியில் ஆசிரியராகவும் இருக்கிறார். பல்கலைக்கழகம் காலம் முதல் அதாவது 2001-லிருந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். 2006-முதல் இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றி வருகிறார். இலக்கியம் தவிர்த்து சமூகம், அறிவியல், அரசியல் துறைகளில் ஆர்வமுள்ள யுவராஜ், தொடர்ந்து இதழ்களிலும் சொந்த இணையப்  பக்கத்திலும் (syuvarajan.com) எழுதி வருகிறார்.


அமர்வு 7: தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள் II


முனைவர் ரெ கார்த்திகேசு (மலேசியா)
எழுத்தாளர்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்




ரேடியோ டெலிவிஷன் மலேசியாவில் ஒலிபரப்பாளராகத் தம் தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய முனைவர் கார்த்திகேசு 60களிலும் 70களிலும் அறிவிப்பாளர், செய்தி வாசிப்பவர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். 1975-ல் கல்வித் துறைக்கு மாறிய இவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் விரிவுரையாளரானார். 1994-ல் பேராசிரியராக நியமிக்கப்பட்ட இவர் 1998-ல் பதவி ஓய்வு பெற்றார். மலேசியா மற்றும் ஆசியாவின் ஒளிபரப்புத்துறை ஒட்டிய இவரது ஆய்வுக் கட்டுரைகள், பல அனைத்துலக இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் வாசகர்களிடையே, ரெ கா என்று பிரபலமாகியிருக்கும் இவர் தமிழில் சிறுகதைகள், நாவல்கள், திறனாய்வுக் கட்டுரைகள் எனத் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். சில படைப்புகளுக்கு விருதுகளும் பெற்றுள்ளார்.

கார்த்திகேசு, இளங்கலை (மலேயா,1968), முதுகலை (கொலம்பியா, 1977) , முனைவர்(லெய்செஸ்டர் 1991) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

முனைவர் தமிழவன் (இந்தியா)
இலக்கிய விமர்சகர்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்



முனைவர் தமிழவன், திராவிடப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் தமிழ்த் துறைத் தலைவர். அவர் வகித்த பதவிகள்: தமிழ்ப் பேராசிரியர், பெங்களூர்ப் பல்கலைக்கழகம்; வருகைதரு பேராசிரியர், வார்சா பல்கலைக்கழகம், போலந்து;  இயக்குனர், மொழிபெயர்ப்பு மையம், சாகித்திய அக்காதமியின் பெங்களூர் மையம் ஆகியன. தமிழவன் 4 நாவல்கள் 20க்கும் மேற்பட்ட திறனாய்வு நூல்கள் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். பல அனைத்துலக இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளதோடு கனடாவின் சிறந்த தமிழ் நாவலுக்கான இலக்கியத் தோட்ட விருதை 2008ல் பெற்றுள்ளார்.

திருவாட்டி கவிதா கரும்பாயிரம் (சிங்கப்பூர்)
செய்தியாளர்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்




கவிதா தற்போது மீடியாகார்ப் பிரைவேட் லிமிடெட்டில் மூத்த தயாரிப்பாளராகப் பணி புரிகிறார். ஊடக, தொடர்புத் தொழில் துறையில் 12 ஆண்டு அனுபவமுள்ள இவர், சிங்கப்பூரில், அச்சு, வானொலி, தொலைக்காட்சி ஆகிய அனைத்துத் தமிழ்ச் செய்தி ஊடகங்களிலும் பணியாற்றியிருக்கிறார். அவரது பணிநிமித்தம்,       சிங்கப்பூரின் தமிழ் இலக்கியச் சூழலைத் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார்.      கவிதா, மீடியாகார்ப் ஆங்கில வானொலி நிலையமான  938Live-ல் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியிருப்பதோடு,  அரசு ஊழியராகவும் நிறுவன மக்கள் தொடர்புத் துறையிலும் கல்வியாளராகவும் பணி புரிந்திருக்கிறார். இவர் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர். பணிக்கு வெளியே, தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மாணவர்களின் தாய்மொழி வாசிப்புப் பழக்கம் பற்றிய ஆய்வுகளில் பங்களிக்க விரும்புகிறார்.


சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஒரு பார்வை

முனைவர் ஆ ரா சிவகுமாரன் (சிங்கப்பூர்)
இணைப் பேராசிரியர், தேசியக் கல்விக் கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்





இணைப் பேராசிரியர், டாக்டர் ஆ ரா சிவகுமாரன் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேசியக் கல்விக் கழகத் தமிழ்த்துறையின் தலைவர். சிங்கப்பூர்க் கல்வி அமைச்சால் தயாரிக்கப்படும் தமிழ்மொழிப் பாடநூல்களின் மதியுரைஞர். தேசியக் கல்விக் கழகத்தின் நல்லாசிரியர் விருதை தொடர்ந்து ஐந்து முறைகள் பெற்றவர். சிங்கப்பூரின் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் ஆய்வேட்டை எழுதி முனைவர் (PhD) பட்டம் பெறுவதற்கு முதன் முதலில் வழி வகுத்தவர், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் தொடர்பாக முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். தனியாகவும், பேராசிரியர்களோடு இணைந்தும், பதிப்பாசிரியராகவும் இருந்து  14 புத்தகங்களை வெளியிட்டவர். அமெரிக்கா, ஜெர்மனி, கனடா முதலிய நாடுகளில் நடைபெற்ற பல அனைத்துலக ஆய்வரங்குகளில் கலந்துகொண்டவர். சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் புரவலர். சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டின் துணைத் தலைவர். யூனூஸ் சமூக மன்ற குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர். சிங்கப்பூர் மக்கள் கழகம் இவரைப் பாராட்டி வழங்கிய நற்சான்றிதழை மும்முறை பெற்றவர்.

இராம கண்ணபிரான் (சிங்கப்பூர்)
எழுத்தாளர்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்







ஓய்வுபெற்ற தமிழாசிரியரான இவர் முதலில் ஆங்கில மொழியாசிரியராக இருந்தவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை எனப் பல்வேறு துறைகளில் எழுதிவரும் இவர் இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும், ஒரு குறுநாவல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். இவரது கதைகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுடன் பல பரிசுகளையும் வென்றுள்ளன. தென்கிழக்காசிய எழுத்து விருது, சிங்கப்பூர்  அரசாங்கத்தின் கலாசார விருது, மோண்ட் பிளாங் விருது, தமிழவேள் விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். அமெரிக்காவின் அயோவா அனைத்துலக இலக்கியப் படைப்பாக்கத் திட்டத்தில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 1988ல் திரு. இராம. கண்ணபிரான் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு மூன்று மாதம் தங்கியிருந்தபோது “பீடம்” எனும் குறுநாவலை எழுதி முடித்தார். அதற்காக அயோவா பல்கலைக் கழகம் இவருக்கு Honorary Writing Fellow எனும் மதிப்பியல் விருதை வழங்கிச் சிறப்பித்தது.

செ.ப. பன்னீர்செல்வம் (சிங்கப்பூர்)
எழுத்தாளர்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்







முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒலிபரப்புத் துறையில் பணியாற்றிய இவர் மதுரை காமராசர், அமெரிக்க லிங்கன் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டங்களும் ஓகலஹோமா பல்கலைக்கழகத்தில் உயர் பட்டமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிரைஞர் (M.Phil) பட்டமும் பெற்றவர். சிங்கப்பூர் வானொலியான ஒலி 96.8ன் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளரான இவர், பின்னர் செய்திப் பிரிவில் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இப்போது அங்கு பகுதி நேரமாகப் பணியாற்றி வருகிறார். 1960 முதல் எழுதிவரும் இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள் என அனைத்துத் துறைகளிலும் படைத்துள்ளார். இவரது படைப்புகள் சிங்கப்பூர், மலேசியா, தமிழ் நாடு ஆகியவற்றின் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன. வானொலிப் பணியில் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்துப் படைத்துள்ளார். சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பல்வேறு கருத்தரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார்.

டாக்டர் சீதா லட்சுமி (சிங்கப்பூர்)
இணைப் பேராசிரியர், தேசியக் கல்விக் கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்





நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியான தேசியக் கல்விக் கழகத்தில் ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார். இவர், சிங்கப்பூரில் தமிழ் மொழியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாவார். இதழியலிலும் ஒலிபரப்புத் துறையிலும் நல்ல அனுபவம் பெற்றவர். கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தேசியக் கல்விக் கழகத்தில் தரமான பேச்சுத்தமிழ், பாடத்திட்ட மறுஆய்வு, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான தமிழ் ஆசிரியவியல், சமூகமொழியியல் ஆகிய துறைகளில் நிதியுதவியுடன் கூடிய ஆய்வுத் திட்டங்களைப் பிறருடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார். உள்ளூர் மற்றும் அனைத்துலக மாநாடுகளில் 30க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்துள்ளார். தனியாகவும் பிறருடன் இணைந்தும் 10க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவரும் வனிதாமணி சரவணனும் இணைந்து எழுதிய ‘தரமான பேச்சுத்தமிழும் ஆசிரியவியலும்’ என்ற ஆய்வு நூல் சிங்கப்பூர்  முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின்  2010ஆம் ஆண்டுக்கான ‘ கரிகாலன் விருதைப்’ பெற்றது.

திரு ச வடிவழகன் (சிங்கப்பூர்)
ஜுரிஸ் டாக்டர்
நாடகவியலாளர்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்






வடிவழகன் சிங்கப்பூரின் நன்கு அறிமுகமான இரு மொழி (ஆங்கிலம் மற்றும் தமிழ்) பன்முகக் கலைஞர். அவர் எழுதிய நாடகங்கள் சிங்கப்பூரிலும் ஆஸ்திரேலியாவிலும் மேடையேறி நன்கு வரவேற்பு பெற்றவை. அதில் சில நாடகங்கள் சிங்கையில் பரிசும் பெற்றவை.  அண்மையில் சிங்கை நாளிதழ் 'தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ்'  இருப‌த்தோராம் நூற்றாண்டில் சிறப்பான படைப்புக்களை படைக்கவிருக்கும் கலைஞர் பட்டியலில் அவரையும்  சேர்த்துக்கொண்டது. அவர் எழுதி இயக்கிய ‘பத்து மாசம்’ எனும் தொலைக்காட்சி நாடகம் சிங்கையின் வசந்தம் தொலைக்காட்சியிலும் இந்தியாவின் விஜய் டிவியிலும் ஒளிபரப்பப்பட்டது.  அவர் எழுதி இயக்கிய ‘விகடவடி’ என்ற சிங்கையின் முதல் தமிழ் கேளிக்கைச்சித்திரம்    “அகில உலக பிரிக்ஸ் ஜநேஸ்” விருது பெற்றது. தற்போது சட்டத் துறையில் ஈடுபட்டிருக்கும் வடிவழகன், சிங்கப்பூரின் தேசிய கலைகள் மன்றத்தின் நாடகத் துறையின் ஆதரவில் “புத்தாக்கவியல்”  முதுநிலை பட்டத்தை ஆஸ்திரேலியாவில் பெற்றார்.

 

 

 

 

 

 

 

 

பதாகை
பதாகை

Official Media

பதாகை

பயனுள்ள இணைப்புகள்




Copyright © 2011 World Tamil Writers Conference