ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப்பரிசுப் போட்டி - 2011 பற்றிய அறிவிப்பு வந்துவிட்டது...!...விவரங்களுக்கு அதற்கான பக்கத்திற்குச் செல்ல கீழே சொடுக்குங்கள்!...முத்தமிழ் விழா 2011 க்கான மாணவர் மற்றும் பொதுப்பிரிவுக்கான போட்டிகள் பற்றிய அறிவிப்புகள் வந்து விட்டன. விவரங்களுக்கு அதற்கான பக்கத்திற்குச் செல்ல கீழே சொடுக்குங்கள்!.....
 
Home
About us
Events
Literature
Feed Back
Site Map
Counter Stats

Myspace Layouts
கவியரசு கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசன் 20ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த மிகப்பெரிய கவியரசர். ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களை இயற்றியவர். கதைகள், நவீனங்கள், நாடகங்கள், நாவல்கள், கட்டுரைகள் பல எழுதி பன்முகம் காட்டிய இலக்கியவாதி. அர்த்தமுள்ள இந்துமதம், ஏசு காவியம் படைத்தவர். எல்லாவற்றுக்கும் மேலாகத் தன் வாழ்க்கையையே மக்களுக்குப் பாடமாக்கியவர். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் அரசவைக் கவிஞராக கௌரவிக்கப்பட்டவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். அவரது திரைப்பாடல்கள் இன்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளன. இவ்வளவு பெருமைகளைக் கொண்ட கவியரசருக்கு விழா நடத்துவது பெரும் சிறப்பு.
 
கவியரசு கண்ணதாசன் விழா
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் இரண்டாவது முக்கிய விழா கவியரசு கண்ணதாசன் விழா. கண்ணதாசன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, அவரோடு நெருங்கிப் பழகியவர்களை சிறப்புப் பேச்சாளராக விழாவிற்கு அழைத்து வந்து அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது விழாவின் சிறப்பு. அதோடு நின்று விடாமல் கண்ணதாசனின் பாடல்களில் பாட்டுப் போட்டிகளையும் நடத்தி பரிசுகளை வழங்கி வருவது மேலும் சிறப்பு. சிங்கப்பூரில் கண்ணதாசன் விழாவிற்கு மக்கள் பெருமளவில் திரளாக வந்து அரங்கங்களை நிரப்புவது கண்ணதாசனின் அழியாப்புகழுக்கு சான்று.

" கவிச்சோலை வலைப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்
கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி- 2010
முத்தமிழ் விழா 2011 - மாணவர் போட்டிகள்
முத்தமிழ் விழா 2011 - பொதுப்பிரிவு போட்டிகள்
மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி 2011
Advertisement1
Advertisement2