முத்தமிழ் விழா 2011
இவ்வாண்டு முத்தமிழ் விழா கடந்த 9.4.2011 சனிக்கிழமை உட்லண்ட்சில் உள்ள ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஸ்வா சதாசிவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். மூத்த கவிஞர் திரு. பெ. திருவேங்கடத்திற்குத் தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தின் குமுதம், கல்கண்டு இதழ்களின் துணையாசிரியர் திரு. லேனா தமிழ்வாணன் “வெற்றி வேண்டுமா?” எனும் தலைப்பில் அருமையாக உரையாற்றி அனைவரையும் கவர்ந்தார். பாலர் பள்ளி, தொடக்கநிலை 1 & 2 வகுப்புகளுக்கான மாறுவேடப் போட்டியின் இறுதிச் சுற்று அனைவரையும் கவர்ந்த மற்றோர் அம்சம். கதை சொல்லும் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை படைக்கும் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்கள் தங்கள் ஆற்றலை மேடையில் அரங்கேற்றினர். ெவற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டுப் போட்டிகளில் 400க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. முத்தமிழ் விழா 2011 படங்கள் |









