பதாகை
முகப்பு நிகழ்ச்சிகள் போட்டிகள் டாக்டர் மு.வ. நூலாய்வுப் போட்டி
டாக்டர் மு.வ. நூலாய்வுப் போட்டி

டாக்டர் மு.வ. நூற்றாண்டு விழா ஆய்வரங்கு இளையர்களுக்கு நூலாய்வுப் போட்டி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தேசியக் கலை மன்றம் ஏற்பாடு செய்யும் எழுத்தாளர் விழாவின் ஒரு பகுதியாக டாக்டர் மு.வ. நூற்றாண்டு விழா ஆய்வரங்கை நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடத்தவிருக்கிறது. அதனை ஒட்டி மு.வ.வின் நாவல்கள் குறித்து ஆய்வுப் போட்டிக்குக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இருபத்து ஐந்து (25) வயதிற்குக் கீழுள்ள மாணவர்கள் உள்ளிட்ட சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

டாக்டர் மு.வ. எழுதியுள்ள 13 நாவல்களில், கீழே கொடுக்கப்பட்டுள்ள 9 நாவல்களில் ஏதாவது ஒரு நாவல் மட்டும் குறித்து நூலாய்வு செய்து அனுப்ப வேண்டும். நெஞ்சில் ஒரு முள், வாடா மலர், கயமை, செந்தாமரை, பாவை, அந்த நாள், மலர்விழி, அல்லி, மண் குடிசை ஆகியவை அந்த 9 நாவல்கள். இவற்றில் பெரும்பாலானவை தேசிய நூலகத்திலும் வட்டார நூலகங்களிலும் கிடைக்கும்.

நூலாய்வு 500 முதல் 600 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். நூலாய்வுக் கட்டுரைக்கு அசல் ஒன்றுடன் மூன்று நகல்கள் (1+3) கட்டாயம் அனுப்ப வேண்டும். 4 பிரதிகள் இல்லாத நூலாய்வுக் கட்டுரைகள் நிராகரிக்கப்படும். நூலாய்வு செய்யப்படும் மு.வ.வின் படைப்பைப் புரிந்து கொண்ட திறன், அவர் வலியுறுத்தும் கருத்து என்ன என்பது பற்றிய தெளிவு, அது இக்காலத்திற்குப் பொருத்தமானதா இல்லையா என்ற உங்கள் கருத்து போன்றவை திறனாய்வு நோக்கில் நூலாய்வில் பதிவு செய்யப்பட வேண்டும்.

நூலாய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ள தாள்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, அடையாள அட்டை எண், தொடர்பு எண்கள் போன்றவற்றைத் தனித் தாளில் எழுதி கதையுடன் அனுப்ப வேண்டும். அத்துடன் வயதை உறுதிப்படுத்த அடையாள அட்டையின் இருபக்க நகலும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். (15.9.2012ஆம் தேதியுடன் வயது கணக்கிடப்படும்.) அந்த விவரங்கள் இல்லாத படைப்புகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டா.

அத்துடன் நூலாய்வு தங்களுடைய சொந்தப் படைப்பு என்ற உறுதிமொழிக் கடிதமும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் : முதல் பரிசு $200;  2ஆம் பரிசு $100; 3ஆம் பரிசு $75; ஊக்கப் பரிசுகள் 3, ஒவ்வொன்றும் $50.

இதில் நடுவர்களின் முடிவே இறுதியானது. வெற்றி பெற்றவர்களுக்கு நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறும் மு.வ. நூற்றாண்டு விழா ஆய்வரங்கில் பரிசுகள் வழங்கப்படும்.

நூலாய்வுகளை 15.9.2012 சனிக்கிழமைக்குள் Association of Singapore Tamil Writers, BLK 723 # 13-149, Yishun Street 71, Singapore 760723 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பதாகை
பதாகை
பதாகை



Copyright © 2011 singaporetamilwriters.com