| முத்தமிழ் விழா 2013 - பொதுப்பிரிவுப் போட்டிகள் |
சிறுகதை, கவிதைப் போட்டிகள்சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது முத்தமிழ் விழாவை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் தமிழ் விழாவின் ஒரு பகுதியாக இவ்வாண்டும் நடத்தவிருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி நடைபெறும் முத்தமிழ் விழாவை முன்னிட்டு இவ்வாண்டும் வழக்கம்போல் பொது மக்களுக்குச் சிறுகதை, கவிதைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பரிசுகள் - சிறுகதை முதல் பரிசு $300; 2ஆம் பரிசு $200; 3ஆம் பரிசு $100. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $75. பரிசுகள் - கவிதை முதல் பரிசு $200; 2ஆம் பரிசு $100; 3ஆம் பரிசு $75. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $50. சிறுகதைக்கான விதிகள் கதைக் கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்திருக்க வேண்டும். கதைகள் 1,000 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 1,400 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 கதைகள் அனுப்பலாம். ஒவ்வொரு கதைக்கும் அசல் ஒன்றுடன் மூன்று நகல்கள் (1+3) கட்டாயம் அனுப்ப வேண்டும். 4 பிரதிகள் இல்லாத கதைகள் நிராகரிக்கப்படும். கவிதைக்கான விதிகள் கவிதைகள் மரபுக் கவிதையாகவோ புதுக்கவிதையாகவோ இருக்கலாம். கவிதை எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூர்ச் சூழலில் இருக்க வேண்டும். கவிதைகள் 24 வரிகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் அதிகப்டசமாக 3 கவிதைகள் அனுப்பலாம். ஒவ்வொரு கவிதைக்கும் அசல் ஒன்றுடன் மூன்று நகல்கள் (1+3) கட்டாயம் அனுப்ப வேண்டும். 4 பிரதிகள் இல்லாத கவிதைகள் நிராகரிக்கப்படும். பொதுவான விதிகள் சிங்கப்பூரின் அடையாள அட்டை (IC, Employment Pass. S Pass, Work Permit) வைத்துள்ள யாரும் போட்டிகளில் பங்கேற்கலாம். எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்கள் மடடும் போட்டிகளில் பங்கேற்க முடியாது. கதைகளும் கவிதைகளும் எழுதப்பட்டுள்ள தாள்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, அடையாள அட்டை எண், தொடர்பு எண்கள் போன்றவற்றைத் தனித் தாளில் எழுதி கதையுடன் அனுப்ப வேண்டும். அத்துடன் அடையாள அட்டையின் இருபக்க நகலும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த விவரங்கள் இல்லாத படைப்புகள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டா. படைப்புகளைக் கூடியவரை கணினியில் அச்சிட்டு அனுப்ப வேண்டும். எழுதிய அனுப்பினால் கையெழுத்து, புரியும்படி தெளிவாக இருக்க வேண்டும். சிறுகதையோ, கவிதையோ தன்னுடையதுதான் என்றும் வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என்றும் உறுதிக் கடிதம் இணைக்கப்பட வேண்டும். போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது. சிறுகதைகளையும் கவிதைகளையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், BLK 723 # 13-149,Yishun Street 71, Singapore 760723 எனும் முகவரிக்கு 15.03.2013க்குள் வந்து கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மேல் விவரங்களுக்கு சுப. அருணாசலம் – 93221138; இராம. வயிரவன் – 93860497; கா. பாஸ்கர் – 90081573 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். www.singaporetamilwriters.com இணையத் தளத்தையும் பார்க்கலாம். |


