| மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி 2013 விவரங்கள் |
|
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தும் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி, இவ்வாண்டு வழக்கம்போல் நடைபெற இருக்கிறது. அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு நாளை ஒட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பரிசளிப்பு விழா நடைபெறும். சிறுகதை, கவிதை, கட்டுரை என மூன்று துறைகளுக்குச் சுழல் முறையில் பரிசு வழங்கப்பட்டு வருவதால் இவ்வாண்டு சிறுகதைத் தொகுப்பு நூலுக்குப் பரிசு வழங்கப்படும். அதனால் 2010, 2011, 2012 ஆகிய மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு நூல்களை எழுத்தாளர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம். நூல்களை அனுப்பி வைக்க இறுதி நாள் 30.04.2013. சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூலுக்கு 2,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். போட்டிக்கான படிவத்திற்கு க்ளிக் செய்க: போட்டிக்கான படிவம் நூல்களும் படிவமும் வந்து கிடைக்க வேண்டிய இறுதி நாள் = 30-04-2013 மேலும் விவரங்களுக்கு: நா.ஆண்டியப்பன் - 97849105 சுப.அருணாசலம் - 93221138 |


