| மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி 2012 விவரங்கள் |
|
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் 2012ஆம் ஆண்டிற்கான ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டிக்கு கட்டுரை நூல்கள் வரவேற்கப்படுகின்றன. 2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை நூல்களை எழுத்தாளர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம். சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூலுக்கு 2,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்க: போட்டிக்கான விதிகள் PDF போட்டிக்கான படிவத்திற்கு க்ளிக் செய்க: போட்டிக்கான படிவம் PDF நூல்களும் படிவமும் வந்து கிடைக்க வேண்டிய இறுதி நாள் = 15-04-2012 மேலும் விவரங்களுக்கு: நா.ஆண்டியப்பன் - 97849105 சுப.அருணாசலம் - 93221138 |


