பதாகை
முகப்பு நிகழ்ச்சிகள்

முத்தமிழ் விழா 2013

 

இவ்வாண்டு முத்தமிழ் விழா கடந்த 7.4.2012 சனிக்கிழமை சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ர​ம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மூத்த எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமான திரு. எ​​ஸ். எஸ். சர்மாவுக்குத் தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

தமிழகத்தின் வாணியம்பாடி இசுலாமியக் கல்லுாரி தமிழ்த் துறையின் முன்னைய தலைவர் பேராசிரியர் முனைவர் அப்துல் காதர்  “விழித்தால் விடியும்” எனும் தலைப்பில் அருமையாக உரையாற்றி அனைவரையும் கவர்ந்தார்.

பாலர் பள்ளி, தொடக்கநிலை 1 & 2 வகுப்புகளுக்கான மாறுவேடப் போட்டியின் இறுதிச் சுற்று அனைவரையும் கவர்ந்த மற்றோர் அம்சம்.

கதை சொல்லும் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை படைக்கும் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்கள் தங்கள் ஆற்றலை மேடையில் அரங்கேற்றினர்.

​வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பொதுப் பிரிவில் சிறுகதை. கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்வாண்டுப் போட்டிகளில் 300க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

 

முத்தமிழ் விழா 2013 படங்கள்

dsc_1908.jpg dsc_1952.jpg dsc_2051.jpg dsc_2052.jpg dsc_8394.jpg dsc_8414.jpg dsc_8420.jpg dsc_8443.jpg dsc_8481.jpg dsc_8583.jpg

பதாகை
பதாகை
பதாகை



Copyright © 2011 singaporetamilwriters.com